ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் பா. சிதம்பரம் சி பி ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதை எதிர்க்கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட 12 மாதங்களாக அந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் பெற்று வந்த இவர் கடந்த 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஜாமின் வழங்க மறுத்து கைதுசெய்ய உத்தரவிட்டது.

இதைனையடுத்து, டெல்லி ஜோர்பார்க் இல்லத்தில் சி பி ஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை தீடீரென கைது செய்தனர்.அதன் பிறகு ஐந்து நாட்கள் தொடர்ந்து கடுங்காவலில் வைத்து சி பி ஐ அதிகாரிகள் விசாரித்தனர், இதனையடுத்து உச்ச நீதிமன்றம் மேலும் நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், அமலாக்கத் துறையும் இணைந்து இவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதால் இவர் குடும்பத்தினர் தொடர்ந்த முன் ஜாமீன் வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்வதை 28 ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
இதனால், தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிதம்பரத்தை விடுவிக்க கோரி ஆர்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து சி பி ஐ கைதை ரத்து செய்ய சிதம்பரம் தொடர்ந்த வழக்கும் அமலாக்கத் துறை வழக்கும் நாளை விசாரிக்கப்படும் என வழக்கை ஒத்தி வைத்தது, நீதிமன்றத்தின் பானுமதி மற்றும் போபண்ணா ஆகியோர் அமர்வு.
இதனைதொடர்ந்து, சிதம்பரம் குடும்பத்தினர், நாங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முறையான வரி செலுத்தி பொது வாழ்க்கையை வாழ்கிறோம். சிதம்பரம் மீது பொய் வழக்கை தொடர்ந்து அவரை சிறை சாலை அனுப்ப முயற்ச்சி செய்கிறார்கள். அவரின் பெயரை சீர்குலைக்க எடுக்கப்படும் முயற்சி எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சிதம்பரத்திற்க்கு எதிராக எதேனும் ஒரு ஆதாரத்தை காவல் துறையால் கொடுக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.