Categories: அரசியல்

அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமெனில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்! நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு!!

வெளியிட்டது
அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமெனில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்! நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு!! 1

நெல்லையில் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் நாங்குநேரி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது பச்சையாறு அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றியது. இதனால் பல்வேறு விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். தாமிரபரணி கருமிணி ஆறு நம்பி ஆறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மழை, சூறாவளி, இயற்க்கை பேரிடர்வு ஏற்படும் சூழ்நிலையில் வாழை விவசாயிகள் பல இழப்புகளுக்கு ஆளாகின்றனர்.
ஆனால் நடந்து வரும் ஆட்சியில் இழப்பீட்டு தொகை கொடுக்கப்படவில்லை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இழப்பீட்டு தொகை வழங்க கூடிய திட்டங்கள் மேற்கோள்வோம் என கூறினார்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்புத் திட்டத்தை கடந்த 8ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது 2020-க்குள் நிறைவேற்றிவிடுவோம் என்று முதலமைச்சர் சொல்வது கண்துடைப்பு நாடகம். நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க முடியவில்லை. நீட் தேர்வால் மாணவி அனிதா உள்பட பலர் தற்கொலை செய்து கொண்டனர். கலைஞர், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தமிழகத்திற்குள் நுழையவில்லை.

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்து விட்டது. மக்களை பற்றியோ நாட்டை பற்றியோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிந்தித்து பார்க்கவில்லை. தமிழகத்தில் பல அடிப்படை பிரச்சனைகள் உள்ளன. அடிப்படைபிரச்சனைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்