
ஏ.ஆர். முருகதாஸ் வெற்றி பட இயக்குனர் பட்டியலில் தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருப்பவர். விஜய்யை வைத்து சர்கார் என்ற படத்தை கொடுத்த இவர் அடுத்தப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்தார்.அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது என இசையமைப்பாளர் அனிருத் அண்மையில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தர்பார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் தீனா படத்திற்கு பிறகு அதாவது பல வருடங்கள் கழித்து மீண்டும் அஜித்துடன் இணைகிறார் என கிசுகிசுப்படுகிறது.
கிசு கிசுவாக இச்செய்தி வந்தாலும் நிஜமாக கூடாதா என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்