
அமெரிக்கவுடன் போர் செய்வதற்கு தான் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாக ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 14-ம் தேதியன்று அதிகாலையில் சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு அரம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து வீணாகிவிட்டது. ஆதலால் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டது.
இந்த விலை உயர்வு அமெரிக்காவையும் பெருமளவில் பாதித்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் 67.31 டாலராக உயர்ந்துள்ளது. சந்தையில் கச்சா எண்ணெய் ஒன்று 60.46 டாலராக உயர்ந்துள்ளது. அதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசுக்கு உத்தரவிட்டுளார்.
மேலும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஈரான் தான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார். அவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ட்விட்டரில் “இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை நாங்கள் அறிவோம். குற்றவாளிகளுக்கு பாடம் புகட்ட எங்கள் ராணுவம் தயாராக உள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஈரான் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. மேலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை ஈரான் நாட்டின் மீது கூறினால் அமெரிக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.