Categories: சமூகம்

அரசியல் விளம்பரங்களைத் தடை செய்த டுவிட்டர்.!

வெளியிட்டது
அரசியல் விளம்பரங்களைத் தடை செய்த டுவிட்டர்.! 1

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் தனது தளத்தில் வரும் அனைத்து அரசியல் விளம்பரங்களைத் தடை செய்யப்போவதாக கூறியுள்ளது.

டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்போவதாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்ஸி தெரிவித்துள்ளார். மேலும் அத்தகைய செய்திகளை “அடைய வேண்டும் மற்றும் வாங்கக்கூடாது” என்று கூறியுள்ளார். அவர்

“இணையதளத்தின் விளம்பரங்கள் நம்பமுடியாத சக்திவாய்ந்த மற்றும் வணிக விளம்பரதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அந்த சக்தி அரசியலுக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களைக் கொண்டுவருகிறது”

என்று செய்தியாளர்களிடம் கூறினார். வருகிற நவம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அதன் முழு விவரங்கள் நவம்பர் 15 க்குள் வெளியிடப்படும் என்றும் கூறினார். இதற்கு முன்பு பிரபல சமூக வளைதளமான பேஸ்புக் அரசியல் விளம்பரங்களைத் தடைச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்