Categories: அரசியல்

அரசு முறை பயணம் வெற்றியடைந்துள்ளது – சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி

வெளியிட்டது

அரசுமுறை பயணம் வெற்றியடைந்துள்ளதாக, சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசு முறை பயணம் வெற்றியடைந்துள்ளது - சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி 1

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈட்ட 14 நாட்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்ட தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அரசு முறை பயணமாக கடந்த மாதம் 28 ஆம் தேதி இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தனது அமைச்சர்கள் எம் சி சம்பத், செங்கோட்டையன், விஜய பாஸ்கர் மற்றும் பல அமைச்சர்களும் சேர்ந்து தொடங்கினர். முன்னதாக இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட இவர்கள் அங்கு முதலீட்டாளர்களையும், தமிழ் பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து முதல்அமைச்சர் மற்றும் அவரை தொடர்ந்து 15 பேர் இங்கிலாந்தில், மருத்துவமனை மற்றும் கால்நடை பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இங்கிலாந்தை தொடர்ந்து இந்த மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட அமைச்சர்கள் அங்கு நியூ யார்க் நகரம் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான நிலை உள்ளதாகவும், தொழில் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பின்னர் அமெரிக்க சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் சென்றனர் அமைச்சர்கள் குழு அங்கு அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்நிலையில் முதலமைச்சர் தனது 14 நாட்கள் வெளிநாடு பயணம் முடித்து விட்டு இன்று சென்னை திரும்பினார். வெளிநாடுகளில் உள்ள தமிழ்ர்கள் வரவேற்ப்பு மகிழ்ச்சி அளித்ததாகவும், தமிழகத்தில் அனைத்து நாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர் எனவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்