Categories: உலகம்

அறிவியலின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் மிக அழகான பெண்!!

வெளியிட்டது
அறிவியலின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் மிக அழகான பெண்!! 1

சூப்பர்மாடல் பெல்லா ஹடிட் அவர் உலகின் மிக அழகான பெண்ணாக அறிவியலின் படி தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரேக்க கணிதத்தின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“பியூட்டி ஃபை தரநிலைகளின் கோல்டன் விகிதம்” என்னும் விகிதம் கிளாசிக் கிரேக்க கணக்கீடுகளுக்கு ஏற்ப அழகை வரையறுக்கிறது. விஞ்ஞான விதிமுறையுடன் அழகை வரையறுக்க முயற்சிக்கும்போது கிரேக்க அறிஞர்கள் பயன்படுத்திய தரங்களின்படி முக விகிதங்களின் அளவீடுகள் செய்யப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு அழகியைத் தேர்ந்தெடுக்க இந்த அளவீடுகளை லண்டனின் புகழ்பெற்ற ஹார்லி தெருவில் உள்ள ஒரு சிறந்த முக அழகு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலியன் டி சில்வா நடத்தினார்.

இந்த “கோல்டன் ரேஷியோ” அளவீடுகளின்படி, 23 வயதான பெல்லாவின் முகம் 94.35 சதவீதம் சரியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டாக்டர் ஜூலியன் டி சில்வா அவர்கள்

“முகத்தின் அனைத்து கூறுகளும் உடல் முழுமைக்காக அளவிடப்படும் போது பெல்லா ஹடிட் தெளிவான வெற்றியாளராக இருந்தார். அவர் தனது கன்னத்திற்கான அதிகபட்ச ஒட்டுமொத்த மதிப்பெண்ணைப் பெற்றார், அவரின் கன்னம் 99.7 சதவிகித மதிப்பெண்ணுடன், சரியான வடிவத்திலிருந்து. 0.3 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது”

என்று கூறியுள்ளார். பெல்லாவிற்கு அடுத்தப்படியாக பாப் தியா பியோன்ஸ் இடம் பெற்றார். அம்பர் ஹியர்ட், அரியானா கிராண்டே மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்