தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெடுகளை வீழ்த்தி, அபாரமாக செயல்பட்டுள்ளார் அஸ்வின்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா அணி மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் அஸ்வின் 46.2 ஓவர்கள் வீசி 11 மெய்டன் ஓவர்களோடு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் ஜடேஜா 2 விக்கெடுகளையும் மற்றும் இஷாந்த் சர்மா 1 விக்கெடுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் குவித்து 128 ரன்கள் முன்னிலையில் உள்ளது.