
ஆப்கானிஸ்தான் நாட்டில் தெற்கிலுள்ள ஜலாலாபாத் என்னும் இடத்தில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்காக வழிபாட்டிற்கு மக்கள் கூடியிருந்த போது குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த குண்டு வெடிப்பில் சுமார் 62க்கும் மேற்பட்ட ஆண்கள் உயிர் இழந்ததாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மசூதியின் கூரை முற்றிலுமாக விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஹஸ்கா மேனா மாவட்டத்தின் ஜவ்தாரா பகுதியில் உள்ள மசூதிக்குள் வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களில் இருந்து பல குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக கர்ஹார் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அட்டாவுல்லா கோக்யானி தெரிவித்தார். இதனால் பலர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மசூதி முற்றிலுமாக இடிந்து விழுந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி மூத்தவரான மாலிக் முகமதி குல் ஷின்வாரி தெரிவித்தார். மேலும் ஷின்வாரி என்றவர்
“இது என் கண்களால் நான் கண்ட ஒரு இதயத்தை உடைக்கும் காட்சி”
என்று கூறினார். பலர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார்.