
இந்திய நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிதி ஆண்டில் 7 சதவிகிதமாக வளர்ச்சி பெரும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ. எம். எஃப்) தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அவர்கள் கூறியுள்ளார்.
கீதா கோபிநாத் அவர்கள் இந்திய நாட்டின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6.1 சதவிகிதமாக வளர்ந்து வரும் என்று சர்வதேச நாணய நிதியம் முன்பே கூறியுள்ளதாகக் கூறினார். இந்திய நாட்டில் பல துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் முன்னதாக கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தை அடையாமல் 6.1 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. வங்கிகளில் வளர்ச்சி குறைந்துள்ளதும், ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்பு ஆகியவற்றை பொருளாதரத்தின் சரிவுக்கு ஒரு காரணமாகும். மேலும் இப்போது வளர்ச்சி விகிதம் மந்தமான நிலையில் தான் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அடுத்த நிதியாண்டில் (2020) இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவிகிதமாக உயரும் என்று கூறினார். மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள கார்பரேட் வரி குறைப்பு மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் அனைத்தும் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.