
வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட பலவீனமாகி வருவதாகவும் அதன் காரணத்தையும் கூறுகிறது. இந்திய அரசின் தகவல் படி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளின் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 0.3 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜீ.டி.பி) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் 7 மற்றும் 7.2 விகிதங்களில் வளரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இது உள்நாட்டு தேவைக்கு எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருப்பதை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இதற்கு முன் மார்ச் 2013 ஆம் ஆண்டின் 4.3 சதவீதமே குறைந்த அளவாக பதிவாகியுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பிற்கு காரணம் கார்ப்ரேட் மற்றும் ஒழுங்குமுறையின் நிச்சயமற்றதன்மை மற்றும் வங்கி சாரா நிறுவனங்களில் நீடித்த பலவீனமே ஆகும். மேலும் உற்பத்தி துறையில் கூர்மையான சரிவு, விவசாய துறையிலும் மந்தநிலை ஏற்பட்டதால் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக உயரும் என்று நம்பப்படுகிறது.