
பாகிஸ்தான் நாட்டின் கல்வி ஆர்வாலரான மலாலா யூசுப்சாய், ஐ.நா.வை காஷ்மீரில் அமைதிக்காக செயல்பட வேண்டும் என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 22 வயதான மலாலா காஷ்மீர் மாணவர்கள் “40 நாட்களுக்கு மேல் பள்ளிகளில் சேர முடியவில்லை“, “வீீீீடுகளை விட்டு வெளியேற பயந்த பெண்கள்” பற்றிய செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்திருந்தார்.
மேலும் “காஷ்மீர் மக்களின் குரல்களைக் கேட்கவும் , குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்குச் செல்ல உதவுங்கள்” என்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தலைவர்களிடம் நோபல் பரிசு பெற்ற இளையவர் மலாலா அவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று ட்வீடில் கேட்டுக்கொண்டார்.
இதனால் இந்திய உறுப்பினர்கள் ட்விட்டரில் மலாலாவின் கருத்துக்கள் பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளின் அவலநிலை குறித்து அவரது அமைதியை கேள்வி எழுப்பிய கடுமையான விமர்சனங்களை ஈர்த்தது.
பாஜக தலைவர் ஷோபா கரண்ட்லேஜே, சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் ட்விட்டரில் மலாலாவின் கருத்துக்களை விமர்சனம் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டுவந்து அதன் அரசியலமைப்பின் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்த ஆகஸ்ட் 5 முதல் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டு, பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.