
இந்தியாவின் மிகவும் உறுதியான மற்றும் சீரான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பங்கஜ் அத்வானி நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று மியான்மரில் உள்ள மாண்டலே நகரத்தில் நடைபெற்ற. ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று உலக பட்டத்தை தட்டிச் சென்றார்.
இந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் 150-அப் வடிவத்தில் நான்காவது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது உலக பட்டங்களை 22 ஆக உயர்த்தினார். பில்லியர்ட்ஸின் குறுகிய வடிவத்தில் கடந்த ஆறு வருடங்களில் பங்கஜ் அத்வானி ஐந்து பட்டங்களை வென்றுள்ளார்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற ஐபிஎஸ்எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிறந்த கியூயிஸ்ட் பங்கஜ் அத்வானி 5-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தின் மைக் ரஸ்ஸலை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இப்போட்டியின் இறுதிச்சுற்றில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த நே த்வே ஓவை 6-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலக பட்டத்தை கைபற்றினார்.
22 வது உலக பட்டத்தை வென்றபோது, பங்கஜ் , “நான் ஒரு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு முறையும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது – நான் சிறந்து விளங்குவதற்கான எனது உந்துதல் குறையவில்லை. இந்த வெற்றி எனது பசியும் நெருப்பும் நன்றாகவும் உண்மையாகவும் உயிருடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.” இவ்வாறு கூறினார்.