Categories: உலகம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அமெரிக்கா பயணம்!!

வெளியிட்டது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அமெரிக்கா பயணம்!! 1

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்க சுற்றுபயணம் பயணம் மேற்கொள்கிறார்.செப்டம்பர் 21 ந்தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ந்தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருடாந்திர ஐநா பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதமர் நியூயார்க்கில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் செப்டம்பர் 21-ந் தேதி மாலை  முதல் செப்டம்பர் 27-ந் தேதி மதியம் வரை இருக்கும். இந்த பயணத்தின் போது ஹூஸ்டனில் நடைபெறும் அமெரிக்க இந்தியர்கள் நடத்தும்  நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார்.
ஐநா பொதுச்சபையின் 74வது அமர்வில்,  பட்டியலின்படி பிரதமர் மோடி செப்டம்பர் 27-ந் தேதி காலை உரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்