Categories: சமூகம்

இன்னும் சில நாட்களுக்கு தொடரும் மழை! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

வெளியிட்டது
இன்னும் சில நாட்களுக்கு தொடரும் மழை! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! 1

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கன மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் திறந்துவிடப்பட்ட உபரி நீரால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த வெள்ள நீர் பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தை வந்து சேர்ந்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதைனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

ஒருகட்டத்தில் அணையில் தண்ணீர் நிரம்பி மீண்டும் ஒரு வரலாறு படைத்தது. அதனால் எராளமான தண்ணீர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. இது விவசாயிகளை பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் மழை குறையும் நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள தகவலின்படி, வெப்பச் சலனம் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், இதன் காரணமாக தமிழகத்திலும் மற்றும் புதுச்சேரியிலும் வரும் 3 நாட்களுக்கு லேசான மற்றும் மிதமான மழை பெய்யக் கூடும். சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான வானிலையே நிலவும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் அல்லது இரவில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக வந்தவாசியில் 12 செ.மீ, போளூர் 9 செ.மீ, ஆரணி 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்