இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்…! முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

வெளியிட்டது
இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்...! முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? 1

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனையடுத்து பொருளாதாரத்தை உயர்த்துவது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது நிலையில், இதனால் பல்வேறு துறைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டது உள்ளது.பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால்தான் இது போன்ற பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வங்கிகள் இணைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று மீண்டும் செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கவுள்ளார். இதனால் பொருளாதாரத்தை முன்னேற்ற ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஓலா, ஊபர் பயன்பாட்டினால்தான் வாகன உற்பத்தி மந்த நிலையில் இருக்கிறது என நிர்மலா சீதாராமன் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இந்திய பொருளாதாரத்தில் முன்னேற்ற நிலையே காணப்பட்டாலும் அது தொடருமா இல்லை பொருளாதாரத்தை முனேற்ற எதேனும் முடிவெடுக்கப்பட்டுள்ளாதா என இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தான் தெரிய வரும்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்