Categories: அரசியல்

இன்று தனது 74 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா காணும் ப. சிதம்பரத்துக்கு இப்படியொரு நிலைமையா!!

வெளியிட்டது
இன்று தனது 74 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா காணும் ப. சிதம்பரத்துக்கு இப்படியொரு நிலைமையா!! 1

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆனால் தற்போது சிறையில் இருப்பதால், கடும் சோகத்தில் உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் என்ற கிராமத்தில் 1945 செப்டம்பர் 16ஆம் தேதி ப.சிதம்பரம் பிறந்தார். 1967 ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் என்ற நாளிதழில் சிறிது காலம் பணியாற்ற தொடங்கினார். பின்னர் சட்ட கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞராக தனது பணியை ஆரம்பித்தார். காங்கிரஸிற்கு இந்திரா காந்தி தலைமை வகித்த போது, அக்கட்சியில் 1972 ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்தவர் ப. சிதம்பரம். 1973ல் தமிழ்நாடு மாநில இளைஞர் அணி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து மைதிலி சிவராமன், இந்து என்.ராம் ஆகியோர் இணைந்து ரேடிக்கல் ரிவ்யூ என்ற இதழை வெளியிட்டு வந்தார்கள்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூப்பனார் பரிந்துரையால், 1976ல் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒருமுறை சிவகங்கை மாவட்டத்திற்கு இந்திரா காந்தி வந்திருந்த நிலையில், அவரது சொற்பொழிவை மக்களுக்கு மொழிபெயர்த்து, கட்சி தலைமையிடம் சிறப்பு பெயர் பெற்றார். 1977ல் நடைபெற்ற காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார், ஆனால் அப்போது அவர் தோல்வியை தழுவினார். 1984ல் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். இதனையடுத்து பலமுறை அதே தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

2001 ஆம் ஆண்டு காங்கிரஸ் – அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிக்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை தொடங்கினார்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனது கட்சியின் சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் நின்று, வெற்றி பெற்று ப.சிதம்பரம் அமைச்சர் என்ற பதவியை அடைந்தார். இதனையடுத்து கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டி காங்கிரஸ் உடன் சேர தீர்வு செய்யப்பட்டது. அதே ஆண்டு காங்கிரஸ் உடன் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற சிதம்பரம் உருவாக்கிய கட்சி காங்கிரஸ் உடன் இணைந்தது. 2004ல் மத்திய நிதியமைச்சர், 2008ல் மத்திய உள்துறை அமைச்சர், 2012ல் மத்திய நிதியமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். நிதியமைச்சராக 8 முறை பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த போது ஐ என் எக்ஸ் மீடியாவின் முதலீட்டீல் முறைகேடு செய்து சி பி ஐ மற்றும் அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது இந்த நிலையில் இரண்டாம் முறையாக பா ஜ க பதவி ஏற்கவே அந்த வழக்கின் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அவர் தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்