இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா

இந்தியாவின் வலுவான ஸ்கோரால், மிக பெரிய இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா அணி 507 ரன்களும், தென்னாபிரிக்கா அணி 431 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா 1

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 4 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 127 ரங்களும், புஜாரா 81 ரங்களும், ஜடேஜா 40 ரங்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து, 395 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது. ஐடன் மார்க்ரம் மற்றும் தியூனிஸ் டி புருய்ன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஜடேஜா 1 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார்.

நாளை ஒரு நாள் தான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெரும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்