Categories: உலகம்

உலகின் அதிவேக கார் தயாரிக்கப்பட்டுள்ளது!!

வெளியிட்டது
உலகின் அதிவேக கார் தயாரிக்கப்பட்டுள்ளது!! 1

உலகின் அதிவேகமாக செல்லும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளட்ஹெளன்ட் லேண்ட் ஸ்பீடு ரெக்கார்ட் குழுவினரால் தயாரிக்கப்பட்ட இந்த கார் நேற்று தென்னாப்பிரிக்கவில் உள்ள ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் திறக்கப்பட்டு பந்தய களத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பிளட்ஹெளன்ட் என்று பெயரிடப்பட்ட இந்த கார் மணிக்கு 500 மைல் தூரத்தில் செல்லும் என்று குழுவினர் கூறுகின்றனர். 44 அடி அகலமும் 9 அடி உயரமும் கொண்ட இது 7500 டன் எடை கொண்டது. சுமார் ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் குதிரைத் திறன் கொண்ட இது இ.ஜே.200 யூரோஃபைட்டர் டைபூன் ஜெட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது துல்லியமான எந்திரமான திட அலுமினிய சக்கரங்களைக் கொண்டுள்ளது. அவை சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் அழுத்தங்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிவேகத்தில் செல்லும் இந்த கார் மெதுவாக மற்றும் நிறுத்தும்போது எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை அறிவதற்காக சோதனை நடைபெறும் என்று கூறியுள்ளனர். இந்த கார் புறப்படும் போது 3000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளியிடும் என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த கார் இயக்கப்படும் என்றும் இது 2020ம் ஆண்டில் உலக நில வேக சாதனையை முறியடிக்க முடியும் என்று குழுவினர் கூறுகின்றனர். இதன் முந்தைய பதிப்பை ஓட்டிய டிரைவர் ஆண்டி கிரீன் அவர்கள் இந்த காரை ஓட்டுவார் என்று பி.எல்.எஸ்.ஆர் இன் பொறியியல் இயக்குனர் மார்க் சாப்மேன் கூறியுள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்