கத்தாரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டெறிதல் மற்றும் 1500மீ ஓட்டம் ஆகியவற்றில் தகுதி சுற்றோடு இந்தியா வெளியேறியுள்ளது.
இப்போட்டியில், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய குண்டெறிதல் வீரரான தேஜிந்தர் பால் சிங் டூர் மற்றும் 1500மீ வீரரான ஜின்சன் ஜான்சன் ஆகியோர் தகுதி சுற்றில் தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 20.23 மீட்டருக்கு குண்டெறிந்த தேஜிந்தர் எட்டாம் இடத்தையும், 1500மீ போட்டியில் ஜான்சன் 3நி 39.86 நிறைவு செய்து 34ஆம் இடத்தையும் பிடித்தனர்.

முன்னதாக, ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னுராணி 8வது இடம் பெற்றிருந்தார். இந்த சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் எந்த ஒரு இந்திய வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது