Categories: உலகம்

உலக முதலுதவி தினம்- செப்டம்பர் 14

வெளியிட்டது
உலக முதலுதவி தினம்- செப்டம்பர் 14 1

செப்டம்பர் 14 நாளான இன்று உலக முதலுதவி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் முக்கியத்துவமும் மற்றும் வரலாறும் ஆய்வுப்அபாருள் (தீம்) ஆகும். முதலுதவி செய்வதால் தக்க சமயத்தில் ஒரு உயிரை காப்பாற்றிவிடலாம். ஆதலால், முதலுதவி பற்றிய அறிவை நாம் அனைவரும் முதன்மை மட்டத்தில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

உலக முதலுதவி தினத்தை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஐ.எஃப்.ஆர்.சி) 2000 இல் தொடங்கியது.

விபத்துக்குள்ளான நபரை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லவதற்குள் காலத் தாமதம் ஆகிவிடும். ஆதலால் முதலில் விபத்துக்குள்ளான நபருக்கு முதலுதவி செய்வதனால் தக்க நேரத்தில் காப்பாற்றிவிடலாம்.

விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிய குச்சியை வைத்தோ அல்லது நோட்டுப் புத்தகத்தின் அட்டையை வைத்தோ கட்டுப் போடலாம் என்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையின் முதலுதவி பயிற்சியாளர் பிரியங்கா கூறுகிறார்.

ஒருவர் சாலையில் திடீரென்று உணர்வின்றி செயலிழந்து போனால் முதலில் அவரின் தோல்பட்டையை தட்டிக் கூப்பிட வேண்டும் என்று கூறுகிறார் முதலுதவி பயிற்சியாளர் வினோத்.

காயமடைந்த நபரின் உயிரைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது முதலுதவியின் முதல் குறிக்கோள். காயமடைந்த நபரின் நிலையைக் கையாள்வதே முதலுதவியின் இரண்டாவது நோக்கம், அதாவது சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் சிபிஆர் கொடுப்பது மற்றும் தொற்றுநோயைத் தவிர்ப்பது போன்றவை. மூன்றாவது நோக்கம் உடல்நலம் மோசமடைவதற்கு முன்பு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்