Categories: சமூகம்

ஐ.ஐ.டி கரக்பூர் பட்டதாரி உருவாக்கிய காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சாதனம்!!

வெளியிட்டது
ஐ.ஐ.டி கரக்பூர் பட்டதாரி உருவாக்கிய காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சாதனம்!! 1

ஐ. ஐ. டி கரக்பூரின் இயந்திர பொறியியல் பட்டதாரி டெபயன் சாஹா காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சாதனத்தை உருவாக்கியுள்ளார். இதனை வாகனங்களில் பொருத்தப்படும் சாதனமாகும்.

காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டதாரி டெபயன் சாஹா “பி. எம் 2.5” என்னும் காற்று மாசுபாடுதலைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை உருவாக்கியுள்ளார். இது வாகனங்களின் சைலன்சர் பைப்பிற்கு அருகில் பொருத்தப்பட வேண்டும். மேலும் ஒரு காரில் பொருத்தப்பட்டால் அதன் அருகிலுள்ள 10 கார்களிலிருந்து ஏற்படும் மாசுபாட்டை நடுநிலைப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எய்ம்ஸில் ஆராய்ச்சியாளரான காற்று மாசுபாட்டில் ஆராய்ச்சி செய்த அவர் கூறியதாவது

“எங்களால் உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் பி.எம் 2.5 போன்ற மாசுபடுத்திகளை பாதிக்க மின்சார ஆற்றல் மற்றும் அலை ஆற்றலின் கலவையைப் பயன்படுத்துகிறது. அதாவது அவை காந்தத்தைப் போல செயல்படுகின்றன. அவை சுற்றுப்புற வளிமண்டலத்திலிருந்து மற்ற துகள் மாசுபடுத்திகளை ஈர்க்கின்றன. அதன் அளவு பெரிதாக வளரும்போது கனமாகி மண்ணைப் போல தரையில் பாதுகாப்பாக விழும்”

மேலும் அவர் பி. எம். 2.5 மாசுபடுத்திகள் தான் காற்று மாசுபாடுதலுக்குக் காரணம் என்றும் அதன் சிறிய உருவத்தால் தான் நுரையீரலிலும் இரத்தத்தில் சுலபமாக கலந்துவிடுகிறது என்றும் கூறியுள்ளார்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்