
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஹம்ஸா பின்லேடனின் மரணம் இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள அறிக்கையில் பாக்கிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்காவின் பயங்கரவாத நடவடிக்கையில் பின்லேடனின் மகனும் உயர்மட்ட அல்கொய்தா உறுப்பினருமான ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அல்கொய்தா அமைப்பிற்கு பின்னடைவை மட்டுமின்றி அந்த இயக்கத்திற்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
வான்வழித் தாக்குதல் மூலமாக ஹம்ஸா பின்லேடன் மரணமடைந்ததாக முதன்முதலில் ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பின்லேடன் மகன் அமெரிக்காவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அப்பொழுது எங்கு நடந்தது என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் இந்த ஆண்டு ஜூலை 31இல் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. பின்லேடனின் 20 குழந்தைகளில் ஹம்ஸா பின்லேடன் அவருக்கு 15வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.