Problem நம்மளை Left Hand-ல் டீல் பண்ணும்..! DUDE படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் ஆகி அனைவரையும் கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பின்னர் லவ் டுடே படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தொடர்ந்து இவர் நாயகனாக நடித்த டிராகன் படமும் வெற்றியை பெற்று நூறு கோடி ரூபாய் வசூலை பெற்று உள்ளது. தொடர்ந்து நாயகனாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் பிரதீப். ட்ரைலர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Problem நம்மளை Left Hand-ல் டீல் பண்ணும்..! DUDE படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்,படத்திற்கு ஆவலாக காத்து வருவதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  தளபதி 64 படத்தில் விஜய் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலா?

விளம்பரம்

Embed Video credits : THINK MUSIC

விளம்பரம்

Leave a Comment