விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில்,தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9வது சீசன் தொடங்கி உள்ளது.

இந்த சீசனில் போட்டியளர்களாக திவாகர், ஆரோரா சின்க்ளேர், எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, பிரவீன், அகோரி கலையரசன், கமருத்தீன், ‘விக்கல்ஸ்’ விக்ரம், நந்தினி, அப்சரா, சுபிக்ஷா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியே செல்வதற்கு ரம்யா, FJ, வியானா,வினோத் , கமருதீன்,சாண்ட்ரா மற்றும் சபரி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.