இலங்கை முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் போராட்டம் கட்டுக்குள் வராததால் இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த இராணுவம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்றும் இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ராணுவ தளபதியின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட இருப்பதாகவும் ராணுவ தளபதி கூறியுள்ளார். பொதுத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை சுட்டுத்தள்ள உத்தரவிடபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அதிபரின் அதிகாரங்களை குறைத்து கொள்ள தயாராக இருப்பதாக கோத்தபய அறிவித்தார். இலங்கையில் நேற்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராஜபக்ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமரை நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வருகிறார்.
அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் மறுத்துவிடவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விளம்பரம்