கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராகத்தேர்வு !!

கங்குலி பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராகத்தேர்வு !! 1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி அவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக போட்டியின்றி நேற்றுத் தேர்வு செய்யப்பட்டார். இவர் பி.சி.சி.ஐ.யின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட 2வது இந்திய கிரிக்கெட் வீரராவார்.

மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ தலைமையகத்தில் திங்கள்கிழமை அன்று விருப்பமான பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவர்களான நிரஞ்சன் ஷா மற்றும் என் சீனிவாசன் ஆகியோர் உடன் சென்றனர். மேலும் கங்குலி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த ஒரே வேட்பாளராக ஆனார். 1936 இல் இங்கிலாந்துக்கு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வழிநடத்திய விஜயநகரத்தின் மகாராஜா அவர்கள் பி.சி.சி.ஐ.யின் தலைவராக பணியாற்றிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். மேலும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் ஷிவ்லால் யாதவ் ஆகியோரும் இடைக்கால பி.சி.சி.ஐ தலைவர்களாக 2014 இல் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

அக்டோபர் 23 ஆம் தேதி பி.சி.சி.ஐ தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்திய கிரிக்கெட்டின் உயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் சவுரவ் கங்குலி என்பதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். சவுரவ் கங்குலி அவர்கள்

தொடர்புடையவை  குஜராத்துடனான ஆட்டத்தில் நாம் அறிவில்லாமல் ஆடிவிட்டோம், தோல்வி குறித்து அணியினரிடம் பேசிய கவுதம் கம்பிர்.

“இந்த நியமனத்தில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இது பி.சி.சி.ஐ.யின் புகழுக்கு இடையூறு விளைவித்த நேரம், ஏதாவது செய்ய எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு,”

விளம்பரம்

என்று பத்திர்க்கையாளர்களிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர் செப்டம்பர் 2020ம் ஆண்டு வரை மட்டுமே பி.சி.சி.ஐ.யின் தலைவராக பணியாற்றிய முடியும்.

விளம்பரம்

Leave a Comment