கர்ப்ப காலத்தில் பாராசிட்டமல் உட்கொள்வது குழந்தைகளை பாதிக்கும்.!

வெளியிட்டது
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமல் உட்கொள்வது குழந்தைகளை பாதிக்கும்.! 1

பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமல் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் குழந்தைகள் நடத்தை பிரச்சினைகளுடன் பிறக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பீடியாட்ரிக் மற்றும் பெரினாடல் தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், கர்ப்ப காலத்தின் நடுப்பகுதியில் பாராசிட்டமல் மாத்திரைகளை சாப்பிடுவதன் விளைவுகளையும் மற்றும் ஆறு மாதங்கள் முதல் 11 வயது வரையிலான சந்ததியினரின் நடத்தைகள், நினைவகம் மற்றும் 17 வயது வரையிலான குழந்தைகளின் ஐ.க்யூ ஆகியவற்றை சோதிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜீன் கோல்டிங்

பாராசிட்டமலை கர்ப்ப காலத்தில் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் நடத்தையில் பிரச்னைகள் ஏற்படும் என்று இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது

என்று கூறியுள்ளார். மேலும் கர்ப்பத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது குழந்தைகளில் ஹைபராக்டிவிட்டி போக்குகளை எழுப்புகிறதாக கூறப்படுகிறது. பராசிட்டமால் உட்கொள்ளல் மற்றும் குழந்தைகளில் ஹைபராக்டிவிட்டி மற்றும் கவன பற்றாக்குறை கோளாறு உள்ளிட்ட நடத்தை சிக்கல்களுக்கு இடையேயான ஒரு தொடர்பை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாராசிட்டமால் ஏற்படக்கூடிய நடத்தை விளைவுகளுக்கு சிறுவர்கள் சிறுமிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், குழந்தைகள் ஆரம்பப் பள்ளியின் முடிவை எட்டிய பிறகு இதன் தாக்கம் இருக்காது என நம்பப்படுகிறது.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்