Categories: சினிமா

கவர்ச்சியாக நடித்த இந்துஜா வை கலாய்த்த ரசிகர்கள்!!

வெளியிட்டது
கவர்ச்சியாக நடித்த இந்துஜா வை கலாய்த்த ரசிகர்கள்!! 1

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தாலும் ஹீரோவின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனத்தை கவர்ந்தவர் இந்துஜா. அதிலிருந்து இந்துஜாவுக்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவர் தற்போது இளைய தளபதி நடிக்கும் பிகில் என்ற திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜயுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில், எப்போதும், குடும்ப பெண் போல் நடித்து வரும் இந்துஜா தற்போது கவர்ச்சியில் இறங்கியுள்ளார். ஆம்… சூப்பர் டூப்பர் என்ற படத்தில் தான் கவர்ச்சி கன்னியாக நடித்துள்ளார் ள்ளார். துருவாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள படம் வரும் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது இந்த படம் முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடியை பாணியில் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு சென்னை தாண்டி எங்கேயும் தியேட்டர்களில் வெளியிட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் படத்தை எப்படியாவது விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் படக்குழு இந்துஜா மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிற ஒரு குத்துப்பாடலின் விடியோவை வெளியிட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்துஜா ரசிகர்கள், ‘என்ன சிம்ரன் இது?’ என்று கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர் ஒரு சிலரோ பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் செய்வதா என்று இந்தஜாவை திட்டியும் தீர்த்து வருகின்றனர். எது எப்படியோ படக்குழு நினைத்தது போல் புரொமோஷன் இதன் மூலம் நன்றாக கிடைத்து வருகிறது.

இத்தனை நாட்களாக குடும்ப பெண் பாணியில் நடித்த இந்துஜா இப்படி குத்தாட்டம், கவர்ச்சி என்று அடுத்த லெவலுக்கு சென்றுள்ளதை அவரது ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் படம் வெளியான பிறகு தான் பார்க்க வேண்டும். தொடர்ச்சியாக குடும்ப பெண்ணாக நடித்து நடித்து போர் அடித்துவிட்டது என ஃபீல் பண்ணியிருப்பார் போல அதனால் தான் கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்