Categories: உலகம்

காலம் மாறும்: இங்கிலாந்து இளவரசி

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து, மனைவியுடன் இளவரசர் ஹாரி பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் முன்னாள் உலக அழகியான டயான தம்பதிகளின் இளைய மகனான ஹாரி தனது நீண்ட நாள் காதலியை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

காலம் மாறும்: இங்கிலாந்து இளவரசி 1
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன்

இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக அதிரடியாக அறிவித்தனர். இது சர்வதேச அளவில் விவாதமானது.

காரணம் டயானா. உலக அழகியாக வலம் வந்த இவர், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்சுடன் திருமண வாழ்வை ஏற்படுத்திக்கொண்டார். ஆனால் இவர்களுக்குள் விவாகரத்து ஆகவே, பாரிசில் இவர் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.

தற்போது ஹாரி மற்றும் மேகனின் முடிவு குறித்து இங்கிலாந்துராணியின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் நேரடியாக தலையிட்டு இணக்கமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளார். இதையொட்டி அவர் நேற்று நோர்போக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில், அரச குடும்ப உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் இங்கிலாந்து ராணியின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் ஹாரிக்கும், மேகனுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச குடும்ப உறுப்பினர்களாக அவர்கள் இருக்க விரும்பிய போதிலும், சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை மதிப்பதாகவும், புரிந்துகொள்வதாகவும் ராணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்