காவலர் தலைமையிட அணி துப்பாக்கிச்சுடும் போட்டியில் வென்றனர்.

வெளியிட்டது
காவலர் தலைமையிட அணி துப்பாக்கிச்சுடும் போட்டியில் வென்றனர். 1

தமிழ்நாட்டில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுவாஞ்சேரியை அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி வளாகத்திலுள்ள துப்பாக்கிச் சுடும் தளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.

காவல்துறை தலைவர் மற்றும் காவல்துறை கூடுதல் செயலாக்கம் முன்னிலையில் இப்போட்டி நடைப்பெற்றது. காவல்துறை கூடுதல் செயலாக்கம் இப்போட்டியை தொடங்கி வைத்தார்.

ஆயுதப்படை காவலர், காவலர் தலைமையிடம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், பெண் காவலர் பிரிவு, சென்னை மாநகர ஆணையரகம் உள்ளிட்ட எட்டு மண்டலங்களைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் 250 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தப் போட்டியில் பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் ஆயுதப்படை காவலர் அணியும் ரைபிள், கார்பன் பிரிவுகளில் காவலர் தலைமையிட அணியும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டங்களை தட்டிச் சென்றனர்.

அனைத்து போட்டிகளிலும் காவலர் தலைமையிட அணி முதலிடத்தை பிடித்தனர். காவல்துறை இயக்குனர்கள் சைலேந்திரபாபு, தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து சூழல் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்