Categories: அரசியல்

காஷ்மீரின் இயல்பை விற்பதில் உள்ள தோல்விகள்! குறுந்தொடர் 1

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது என்றால் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை அந்த காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டுமே!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370வது பிரிவை நீக்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமர்நாத் யாத்திரையில் துப்பாக்கி சூடு ஒன்று மர்மமாக தோன்றியதே, அது குறித்து நமக்கு ஏதாவது நினைவிருக்கிறதா?

வழக்கமான எதிரிகளின் தாக்குதலாக புரிந்துக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர், பாத யாத்திரையை இடையிலேயே நிறுத்தி விட்டனர். இதன் மூலம் இந்திய குடிமக்களின் உயிர்களை அரசு பாதுகாக்க அரசு தீவிரமாக இயங்கியதும் நினைவிருக்கிறதா?

இது மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளையும் அங்கிருந்து விரைவாக வெளியேறுமாறு உத்தரவிட்டது. மேலும், காஷ்மிரின் கல்வி நிலையங்களில் படிக்கும் வெளிமாநில மாணவர்களையும் வெளியேறும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் இதனை எல்லாம் செய்ய தெரிந்த மத்திய அரசுக்கு அம்மாநில மக்களை மட்டும் அங்கிருந்து அப்புறப்படுத்த தெரியவில்லையா? அல்லது தோணவில்லையா? அப்படி ஏதும் சிந்தனை ஏற்பட்டிருந்தால், பாஜகவின் இத்தனை நாள் விளையாட்டு கணக்கிற்கு முடிவில்லாமல் போயிருக்கும் என்பதை நம்மால் உணர முடியும்.

காரணம் பாஜகவிற்கு தேவை காஷ்மீரின் நிலப் பகுதியே தவிர, அங்குள்ள மக்கள் அல்ல. அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் சரி, பண்டிதர்களாகவோ அல்லது இன்ன பிற மதத்தினராக இருந்தாலும் சரி அவர்களை பற்றின கவலை பாஜகவிற்கு சிறிதும் கிடையாது. 

மனிதனின் அடிப்படை உரிமைகளான சுதந்திரம், தகவல் பரிமாற்றம், சமூக கூடல் ஆகியவை தடை செய்யப்பட்டிருப்பது காஷ்மீரிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் காஷ்மீர் நிலங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்திருக்கிறது. கூடிய விரைவில் காஷ்மீர் நிலங்கள் விற்பனையாக இருக்கின்றன. 

காஷ்மீரின் இயல்பை விற்பதில் உள்ள தோல்விகள்! குறுந்தொடர் 1 1

இத்தகைய அறிவிப்புகள் வெளியாகும் நேரத்திலும், போராளிகள் யாரும் வெளியே வரவில்லை. இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாராளுமன்றத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மக்களுக்கு முன்னறிப்புகள் இல்லாமல், காஷ்மீரின் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய பாதையை உடைக்கும் வகையில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக அமித் ஷா தெரிவித்தார். காஷ்மீரின் பெரும்பான்மையினரான முஸ்லீம்களை இந்திய ஜனநாயகம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதும், காஷ்மீரின் நிலம் சீர்திருத்தம் அடையும், கல்வி, வேலைவாய்ப்புகள் பெருகும், பெண்களின் உரிமை நிலைநாட்டப்படும், சுகாதார துறை மேம்படும் என்றெல்லாம் மத்திய அரசு கூச்சலிட்ட குரலுக்கு, பெரும்பாலானோர் அந்த ஆதரவு தளத்தில் இணைத்துக்கொண்டனர். ஆனால் இவையெல்லாம் மத்திய அரசின் சுய லாபத்திற்காக தான் என்பது அவர்கள் யோசிக்க தவறிவிட்டனர். 

ஆனால் மத்திய அரசின் வெற்று கூச்சல்களை உடைப்பது போல் சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 35 சதவிகித குழந்தைகள் வளர்ச்சி குன்றி பிறந்துள்ளன. இவற்றுள்  குறைவான எண்ணிக்கையை கொண்டிருப்பது கோவா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் தான். குறிப்பாக இது இந்தி பேசும் மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவற்றை காட்டிலும் மிக குறைவானது. இம்மாநிலங்களில் அதிக அளவிலான குழந்தைகள் வளர்ச்சி குன்றி பிறந்துள்ளன. 

தொடரும்…
தொகுப்பு: விடுதலை தமிழ்முரசு

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்