Categories: அரசியல்

காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் எழுத்து பிழை திருத்தம்!

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த, மறுசீரமைப்பு சட்ட மசோதாவில் காணப்பட்ட 50க்கும் மேற்பட்ட எழுத்து பிழைகளை சரி செய்து, புதிய ஆணையை மத்திய சட்ட அமைச்சகம் இன்று (செப்.13) வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவு அளித்தது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதற்கான அறிவிப்பும் ஆணையையும் அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டதால், இனி காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேச மாநிலமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட உள்ளது.

அவசர கோலத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது போல் ஏகப்பட்ட எழுத்து பிழையோடும் மற்றும் சொற் பிழைகளோடு அவை காணப்பட்டன. இந்நிலையில் புதிய திருத்தங்களை மேற்கொண்ட மத்திய சட்ட அமைச்சகம் அதனை வெளியிட்டது.

அதில் (tterritories, adminstrator, artcle) போன்ற 52 இலக்கண மற்றும் சொற் பிழைகள் கண்டறியப்பட்டு திருத்தியுள்ளது சட்ட அமைச்சகம். மேலும், ஜம்மு&காஷ்மீர் பாராளுமன்றத் தொகுதியும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் பழைய வெளியீட்டில் குறிப்பிடபட்டது.

மேலும், காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட போதும், ஜம்மூ காஷ்மீர் மாநிலம் என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதுவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜம்மூ காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் முழு வடிவம் பெற்றுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்