கிறிஸ் கெயில் சாதனை சதம் வெறித்தனமாக அடித்த சிக்ஸர் ‘வேஸ்ட்’ ஒரே போட்டியில் 37 சிக்சர்கள்…!

வெளியிட்டது
கிறிஸ் கெயில் சாதனை சதம் வெறித்தனமாக அடித்த சிக்ஸர் ‘வேஸ்ட்’ ஒரே போட்டியில் 37 சிக்சர்கள்...! 1

பசேடெரே நகரில் செயின் கீட்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில், ஜமைக்கா வீரரான கிறிஸ் கெயிலின் சாதனை சதம் வீணானது.இந்தியாவின் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., தொடரை போன்று கரீபியத்தீவுகளில்,சி பி எல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் செயிண்ட் கீட்ஸ், ஜமைக்கா அணிகள் மோதிய போட்டியில் செயிண்ட் கீட்ஸ் அணி வென்றது.

முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்த ஜமைக்கா அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெயில் 62 பந்தில், 10 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 116 ரன்கள் அடித்து கைகொடுத்தார். இதையடுத்து ஜமைக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் குவித்தது. இலாலய இலக்கை துரத்திய செயிண்ட் கீட்ஸ் அணிக்கு, தாமஸ் (71), எவின் லீவிஸ் (53) அரைசதம் அடித்து அணியின் நம்பிக்கை நாயகனாக செயல்பட்டார் , செயிண்ட் கீட்ஸ் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இப்போட்டியில் செயிண்ட் கீட்ஸ் ( 16 சிக்சர்கள்) மற்றும் ஜமைக்கா அணி (21 சிக்சர்கள்) என மொத்தமாக 37 சிக்சர்கள் விளாசினர். இதன் மூலம் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய அணிகள் என்ற பெருமை பெற்றது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்