Categories: அரசியல்

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் கடும் எதிர்ப்பு..!

வெளியிட்டது
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் கடும் எதிர்ப்பு..! 1

இந்தியாவில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில் .

“மோடியின் தலைமையில் இந்தியா இந்து மேலாதிக்க செயல்திட்டத்துடன் முறையாக நகர்ந்து கொண்டிருக்கிறது”

என்று ஒரு பதிவில் கூறியுள்ளார். மற்றொரு பதிவில்

“இந்த செயல்திட்டம், பாகிஸ்தான் மீதான அணு ஆயுத மிரட்டல்களுடன் சேர்ந்து, மிகப்பெரிய ரத்த களரிக்கு வழிநடத்தும். உலகிற்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். காலம் கடந்து செல்வதற்கு முன் உலகம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்றும் தெரிவித்துள்ளார். இதனை டுவிட்டரில் பலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்