இந்தியா-வங்கதேசம் பிரதமர்கள் சந்திப்பு!

இந்தியா- வங்கதேசம் இடையிலான மூன்று திட்டங்கள் மற்றும் ஏழு ஒப்பந்தங்களுக்கான உடன்படிக்கை இன்று (அக்.5) டெல்லியில் கையெழுத்தானது.

நான்கு நாடுகள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இருநாட்டு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் இந்தியா-வங்க தேச நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் போன்ற துறைகளுக்கான திட்டங்களுக்கும், ஒப்பந்தகளுக்கும் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா-வங்கதேசம் பிரதமர்கள் சந்திப்பு! 1

இதில் குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களுக்கு பெட்ரோலியம் விநியோகம் செய்ய வங்கதேசத்திலிருந்து இறக்குமதி போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேசியுள்ளனர். அதே போல, கடலோர பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

விளம்பரம்

இந்த சந்திப்பு குறித்து வங்கதேச பிரதமர் செக் ஹசீனா கூறுகையில், “இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உற்சாகமூட்டும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

பிரதமர் மோடியை சந்திக்கும் முன் ஹசீனா, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment