Categories: அரசியல்

கொடூரமான அநீதி: என்.ராம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பா.சிதம்பரத்திற்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் அவரை சிறைக்கு அனுப்பியதன் மூலம் கொடுவுரமான அநீதி இளைப்பட்டுள்ளதாக தி இந்து குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் நேற்று (செப்.15) பங்கேற்று பேசிய என்.ராம், “பா.சிதம்பரத்திற்கு எதிரான கைது நடவடிக்கை என்பது மிக பெரிய உள்நோக்கம் கொண்டதாகும். இந்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு உச்சபட்சமாக நீதி மன்றமும் பலியாகியுள்ளது. முடிந்த வரையில் அவருக்கான சுதந்திரத்தை மறுப்பதே, இதன் முழு பின்னணியாகும்” என விமர்ச்சித்திருந்தார்.

மேலும் பேசியவர், “எந்தவிதமான ஆதாரமும் இல்லாத போது, அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட வேண்டியது. கிட்டத்தட்ட டெல்லி நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஆனால் தீர்ப்பை மட்டும் 7 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வெளியிடப்பட்டது. அது பா.சிதம்பரம் மேல்முறையீடு செய்வதற்கு மறுத்துள்ளது”.

கொடூரமான அநீதி: என்.ராம் 1

நீதிபதிகள் பானுமதி மற்றும் பாபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது தீர்ப்பில் பல தவறுகளை கொடுத்துள்ளது. உதாரணமாக, பா,சிதம்பரத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது முற்றிலும், தவறானது.

குற்றம்சாட்டப்பட்ட இருவரின் அறிக்கைகளை தவிர, வேறு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்த வழக்கில், சந்தேகப்படும் வகையிலான ஆதாரங்கள் அழிக்கப்படவும் இல்லை, எந்த ஒரு சாட்சிகளுக்கும் மிரட்டல் விடவும் இல்லை. ஆனால் இந்த வழக்கில் நீதியை வழங்காதது மிக பெரிய அவமானமாகும். இவ்வாறு என்.ராம் குற்றம் சாட்டினார்.

இவரை தொடர்ந்து பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன், “காங்கிரஸ் மீண்டும் எழுந்து விட கூடாது என்பதற்காக உளவியல் ரீதியாக இந்த யுத்தம் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்