
வாகனிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நாசா உருவாக்கிய சந்திரனின் மண் மாதிரிகளான மண்ணில் பயிர்கள் விளைவித்து உற்பத்தி செய்துள்ளனர். ஆதலால் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மண்ணில் பயிர்கள் விளைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நெதர்லாந்தில் உள்ள வாகனிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சியின் ஆராய்ச்சியாளர்கள் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மண் மாதிரிகளில் பத்து வகையான பயிர்களை விளையச் செய்து உற்பத்தி செய்துள்ளனர். கார்டன் க்ரெஸ், ராக்கெட், தக்காளி, முள்ளங்கி, கம்பு, குயினோவா, கீரை, சிவ்ஸ், பட்டாணி மற்றும் லீக் போன்ற பயிர்களை பயிரிட்டனர். ஆதலால் இந்த பத்து வகையான பயிர்களில் ஒன்பது வகை பயிர்கள் நன்றாக வளர்ந்தது. அவற்றிலிருந்து உண்ணக்கூடிய பாகங்களை மட்டும் அறுவடை செய்யப்பட்டது. ஆனால் கீரை மட்டும் இதற்கு விதிவிலக்கு.
“செவ்வாய் கிரக மண்ணில் வளர்ந்த முதல் தக்காளி சிவப்பு நிறமாக மாறுவதைக் கண்டதும் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். நிலையான மூடிய விவசாய சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் அறியலாம்”
என்று வாகனிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் வைகர் வாமேலிங்க் கூறியுள்ளார். ஆதலால் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மண்ணில் பயிர்கள் விளையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக் கூறப்படுகிறது.
View Comments
i love my nasa