நீரிழிவு என்பது நீண்டகாலத்திற்கு தொடரும் நோயாகும், இது இரத்தத்தில் சர்க்கரையோ அல்லது குளுக்கோஸின் அளவோ அதிகரிப்பதன் காரணமாக ஏற்படுகிறது. சர்க்கரை அளவு அதிகமுள்ள உணவை உட்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர, நமது உணவு, வாழ்க்கை முறை மற்றும் மரபியல் ஆகியவையும் கூட நீரிழிவு அபாயத்தை அதிகரிப்பதில் பங்கு வகிக்கின்றன.
நீரிழிவு நோய் மற்றும் அதன் தாக்கங்களும்:
பொதுவாக உடலின் இரத்தத்தில் சர்க்கரை அளவையோ அல்லது குளுக்கோஸின் அளவையோ கட்டுப்படுத்த கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
உணவிலிருந்து பெறப்பட்ட குளுக்கோஸை உடலின் ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படும். இன்சுலின் உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் அது மிக சர்க்கரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பரவாமல் தடுக்கிறது.
2 வகையான நீரிழிவு:
நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும். முதல் வகையானது, இன்சுலினால் ஏற்படாது. இரண்டாவது வகையானது, இன்சுலினின் செயல்பாடு குறையும் போது ஏற்படுவது. இதில் முதலாவது வகை மரபணு மூலமாக வருவதாகும். இரண்டாவது வகையால் தான் உலகின் 90 சதவிகிதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகப் பதப்படுத்தப்பட்ட உணவில் சுக்ரோஸ் காணப்படும். அது 50 சதவிகிதம் குளுக்கோஸ் மற்றும் ௫௦ சதவிகிதம் பிரக்டோஸ் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. அவற்றை நாம் உட்கொள்ளும் போது அதிலுள்ள பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இரத்தத்தோடு இணைவதற்கு முன்பே சிறு குடலில் உள்ள என்சைம் அவற்றை பிரித்துவிடும். இது இரத்தித்தில் சக்கரை அளவை உயர்த்துகிறது. இதன் வழியாக இன்சுலின் சுரக்கிறது. இன்சுலின் குளுகோஸை இரத்தத்திலிருந்து அப்புறப்படுத்தி செல்களுக்குள் செலுத்தி உடலின் ஆற்றலுக்கு பயன்படுத்த உதவுகிறது.
சிறிய அளவிலான பிரக்டோஸ் உயிரணுக்களில் செலுத்தப்பட்டு ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை கல்லீரலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு அது உடலின் இயக்கத்திக்கு தேவையான ஆற்றலுக்கு குளுக்கோஸாக மாற்றப்படும் அல்லது கொழுப்பாக சேமிக்கப்படும். அதிகப்படியான சர்க்கரை கொழுப்பு அமிலங்களாக மாற்றப்பட்டு உடலில் கொழுப்பாகச் சேமிக்கப்படும். இது உடல் பருமன், கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.
தினசரியாக, இனிப்பு பானங்களை குடிப்பதனால் 25 சதவிகிதம் நீரிழிவு நோயின் 2ஆம் வகை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் நாள் ஒன்றுக்கு, ஒரு முறையாவது இனிப்பு பானங்களைப் பருகுவதால் 13 சதவிகிதம் நீரிழிவு நோய்க்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சக்கரையின் தாக்கம்:
சர்க்கரையை நாம் சுவைக்கும் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீரிழிவு நோயை ஊக்குவிக்கும். இது சர்க்கரைக்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள இணக்கத்தைப் புலப்படுத்துகிறது. மேலும், கல்லீரலில் பிரக்டோஸ் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இன்சுலின் அதிக அளவில் சுரக்கும். இதன் காரணமாகவும் 2 ஆம் நிலை நீரிழிவு நோய் வருகிறது. மேலும், அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உடலின் எடை அதிகரிப்பதற்கும், கொழுப்பு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது. இது நீரிழிவு நோயை உருவாக்குவதற்கான தனி காரணிகளாகச் செயல்படுகிறது.
இயற்கையாகவே, பழங்களிலும், காய்கறிகளிலும் சர்க்கரை காணப்பட்டாலும், செரிக்கப்படும் போது இரத்தத்தில் குறைந்த அளவான சர்க்கரையே கலக்கின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பழத்தை சாப்பிட்டால் நீரிழிவு அபாயத்தை 7-13 சதவிகிதம் வரை தவிர்க்கலாமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழச்சாறுகளில் குறைந்த அளவில் நார்ச்சத்தும், அதிக அளவில் சர்க்கரையும் இருப்பதால், இது நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என பல ஆய்வு சான்றுகள் நிறுவுகின்றன. அதேபோல, சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் மேப்பிள் சிரப், தேன், தேங்காய் சர்க்கரை மற்றும் நீலக்கத்தாழை சிரப் போன்ற இயற்கை இனிப்புகளில் அதிக அளவு பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளதால், அவற்றை மிதமாக உட்கொள்ளுமாறு ஆய்வுகள் அறிவுறுத்துகிறது.
இதே போல, செயற்கையான இனிப்பூட்டிகள், நீரிழிவு தன்மையை அதிகரிக்காது எனவும், ஆனால் இன்சுலின் சுரப்பிற்கு எதிராகச் செயல்படும். டயட் சோடா அருந்துவதாலும், 25 சதவிகிதம் முதல் 67 சதவிகிதம் வரை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழில் தமிழ்முரசு
நன்றி Boldsky