சவுதி வான்வெளி தாக்குதல்: இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்!

மேற்கு ஆசியா நாடுகளில் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் எண்ணெய் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவிற்கு மிக பெரிய அச்சுறுத்தலாகும்.

செப்டம்பர் 14ஆம் தேதி அன்று, சுமார் 10 வானுறுதிகள் சவுதி அரேபியாவின் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அரசுக்கு சொந்தமான அரம்கோ குராய்ஸ் எண்ணெய் வயலை குறிவைத்து தாக்கின. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 5% க்கும் அதிகமான தளங்களில், தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா ஈரானைக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சப்ளை செய்யும் இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது .

இத்தாக்குதல்களுக்குப் பின்னர், உடனடி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தவிர்க்கப்படும் என்றாலும், உலகளாவிய எண்ணெய் விலைகள் 10% முதல் 15% வரை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சவுதி வான்வெளி தாக்குதல்: இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்! 1

தற்போது, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 60 டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டெர்மிடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 54.80 டாலராக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தாக்குதலின் காரணமாக, ப்ரெண்ட் கச்சா பீப்பாய் 65-70 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ பீப்பாய் 60-63 டாலராகவும் உயரக்கூடும்” என்று மும்பையைச் சேர்ந்த பங்குசந்தை தரகு நிறுவனமான ஏஞ்சல் புரோக்கிங்கின் அனுஜ் குப்தா கூறினார். மேலும் “இந்தியாவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் லிட்டருக்கு 1 முதல் 3 ரூபாய் வரை உயரக்கூடும்” என்றார்.

இதற்கிடையில், செப்டம்பர் 16 ஆம் தேதி, எண்ணெய்யின் விலை உயர்ந்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பியூட்சர் பீப்பாய் ஒன்றுக்கு 12 டாலரிலிருந்து உயர்ந்து 72 டாலரை எட்டியுள்ளது. 1988 ஆம் ஆண்டில் ப்ரெண்ட் பியூட்சர்ஸ் விற்பனை தொடங்கப்பட்டதிலிருந்து 18% விலை உயர்வே அதிகமாக இருந்தது.

இந்தியாவில் எரிபொருள் விலைகள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே “அது (கச்சா எண்ணெய்) இறக்குமதி செய்யப்படும் போது ஏற்படும் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும்” என்று குப்தா விளக்கினார்.

கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் போது, இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலையை மேலும் பாதிக்கும். உலகளாவிய கச்சா விலையில் ஏற்படும் விலை ஏற்றம், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் கனமாக்கும்.

“எண்ணெய் விலையின் ஒவ்வொரு டாலர் அதிகரிப்பும் இறக்குமதி விலையில் ஆண்டுக்கு சுமார் 10,700 கோடி ரூபாய் வரை உயர்த்தும். 2018-19 ஆம் ஆண்டில் எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 111.9 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்” என குப்தா தெரிவித்துள்ளார்.

மார்ச் 2020 உடன் முடிவடையும் இந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரை நாள் ஒன்றுக்கு 4.5 மில்லியன் பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு இதனை ஒப்பிடும்போது 0.1 எம்பி / டி குறைந்துள்ளது என கடன் நிறுவனமான கேர் ரேட்டிங் தனது ஆய்வுக் குறிப்பில் தெரிவித்துள்ளன.

விலை உயர்வு மற்றும் குறைந்த நுகர்வின் காரணமாக இந்தியாவின் லாபம் தடைப்படும். 

போதுமான கையிருப்பு:

விலைகள் மீதான தாக்கம் தொடரும் போதிலும், இந்தியாவின் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு வாய்ப்புகள் குறைவு தான்.

“தற்போது, ​​நாட்டின் கச்சா எண்ணெய் தேவைகளை சுமார் 12 நாட்கள் வரை பூர்த்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. விசாகப்பட்டினத்தில் 1.33 மெட்ரிக் டன் அளவும், மங்களூரு (1.5 மெட்ரிக்), மற்றும் பதூர் (2.5 மெட்ரிக்) சேமிப்பு திறன் உள்ளது ”என்று குப்தா கூறினார். “இந்திய சுத்திகரிப்பாளர்கள் 65 நாட்களுக்கு கச்சா சேமிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் ஐ.எஸ்.பி.ஆரின் கச்சா எண்ணெய் இருப்பு திட்டத்தால், இந்திய கச்சா தேவையை 87 நாட்களுக்கு நீட்டிக்கும் என்று தெரிகிறது.

உலகளாவிய நிறுவனங்கள் இப்பற்றாக்குறையை முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை. “எங்கள் நிறுவனம் சவுதி அதிகாரிகள் மற்றும் முக்கிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். இப்போதைக்கு, சந்தைகளுக்கு கச்சா எண்ணெய் சீராக வழங்கப்படுகின்றன” என்று இன்டர்நேஷனல் எனர்ஜி எஜென்ஜியின் (IEA) செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தேவைகள் எழும் பட்சத்தில் அமெரிக்கவின் விநியோகங்கம் இந்தியாவின் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க உதவும். இந்தியா இப்போது அமெரிக்காவை அதிகம் நம்பியுள்ளது. அமெரிக்காவிலிருந்து எங்கள் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் இறக்குமதி மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக கேர் ரேட்டிங் நிறுவனத்தின் ஆய்வாளர் ஊர்விஷா ஜகாஷேத் கூறுகிறார்.

ஆங்கிலத்தில் நிகரிகா சர்மா
தமிழில் தமிழ்முரசு
நன்றி Scroll.in

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்