Categories: சினிமா

சிவகார்த்திகேயன் படத்தை விட குறைவான வசூலை பெற்ற தனுஷ் படம்!!

வெளியிட்டது
சிவகார்த்திகேயன் படத்தை விட குறைவான வசூலை பெற்ற தனுஷ் படம்!! 1

தனுஷின் அசுரன் படம் ரிலீஸான அன்று எவ்வளவு வசூல் அந்த படம் செய்துள்ளது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் படம் கடந்த வெள்ளி கிழமை திரைக்கு வந்தது.

படத்தை பார்த்தவர்கள் தனுஷுக்கு தேசிய விருது இல்லை ஆஸ்கர் விருதே கொடுக்கலாம், அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டியுள்ளார் என்றார்கள். இந்நிலையில் படம் வெளிவந்த அன்று எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது. அசுரன் சென்னையில் மட்டும் ரூ. 52 லட்சம் வசூல் செய்துள்ளது. இது சூர்யாவின் காப்பான் மற்றும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை விட குறைவு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

காப்பான் திரைக்கு வந்த அன்று சென்னையில் மட்டும் ரூ. 89 லட்சமும், நம்ம வீட்டுப் பிள்ளை ரூ. 58 லட்சமும் வசூல் செய்தன. நம்ம வீட்டுப் பிள்ளை நேற்று மட்டும் ரூ. 16 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் உழைப்பில் மண் அள்ளிப்போட்டு தமிழ் ராக்கர்ஸ்! நைட்டோடு நைட்டா அசுரன் லீக். இது மட்டும் காரணம் என நம்மால் கூற முடியாது, இருப்பினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று கூட கூறலாம்.

அசுரன் படத்தை பார்த்த அனைவரும் பாராட்டுகிற வகையில் உள்ளது. ஆனால் வசூல் நிலவரத்தை பார்த்தால் வேறு மாதிரியாக உள்ளது. வார இறுதி நாட்களில் அசுரன் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டை ஆடுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ் ராக்கர்ஸ் வேறு அசுரன் படத்தை நேற்றே இணைய தளத்தில் ஒளிபரப்பு செய்து விட்டான், படக்குழுவின் தலையில் இடியை போட்டது போல் உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை ரிலீஸான முதல் நாளே சென்னையில் ரூ. 88 லட்சமும், மாரி 2 ரூ. 40.3 லட்சமும் வசூல் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்