சீனா ஓபன்: பி.வி.சிந்து தோல்வி

பேட்மிட்டன் உலக சம்பியனும், இந்தியாவின் முன்னிலை வீராங்கனையுமான பி.வி.சிந்து வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்தார்.

சீனா ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்து வீராங்கனை சூசுவாங்கிடம் 21-12, 13-21, 19-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியைத் தழுவினார்.

வழக்கம் போல், எதிராளியை மிரட்டும் பாணியில் விளையாடிய சிந்து, அடுத்தடுத்த சுற்றினை பறிகொடுத்து தோல்வியை தழுவினார்.

இதே போல், இந்தியாவின் சாய் பிரணீத், ஆடவர் பிரிவில் சீனாவை சேர்ந்த லூ ஜியை 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

சீனா ஓபன்: பி.வி.சிந்து தோல்வி 1
பி.வி.சிந்து

மேலும், இந்தியாவின் காஷ்யப், 21-23, 21-15, 12-21 என்ற செட்கணக்கில் இந்தோனேசிய வீரர் கின்டிங்கிடம் தோல்வியடைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில், ரங்கிரெட்டி-சிராங் ரெட்டி இணை, ஜப்பான் வீரர்கள் டகேஷி கமுரா-கிகோ சோனோடா இணையிடம் 19-21, 8-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், அஸ்வினி பொன்னப்பா-என்.சிக்கி ரெட்டி இணை, ஜப்பான் வீராங்கனைகள் மிஸாகி மத்சுடோமோ-அயாகா டகாஹஷி இணையிடம் 12-21, 17-21 என்ற செட் கணக்கில் சரணடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்திலும் அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வி அடைந்து வெளியேறியது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்