Categories: அரசியல்

சீமானை கைது செய்ய வேண்டும் ’ – காங்கிரஸ்!!

வெளியிட்டது
சீமானை கைது செய்ய வேண்டும் ’ - காங்கிரஸ்!! 1

ராஜிவ் கொலை வழக்கு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியிருந்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் இப்போது 7 பேர் இவரது விடுதலையை எதிர்த்து கோஷம் போட தொடங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் , அடிக்கடி இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சிக்குப் பிரச்சாரம் சீமான் அவர்கள் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது, “ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம்” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசி குழப்பத்தை கிளப்பினார்.

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்டவர்கள், 1991 காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறப்படுகிறது. அதன்பின், ராஜிவ் வழக்கில் தொடர்புடையவர்கள் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் உள்பட 7 பேரைக் கைது செய்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது.

இந்த சூழலில்தான், சீமான் பேசிய கருத்து குறிப்பிட்டதாகப் பார்க்கப்படுகிறது. ராஜீவ் காந்தியை முன் வைத்துப் பேசியிருப்பது 7 பேரின் விடுதலையைப் பாதிப்படையச் செய்வதோடு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் சீனாமை உடனடியாக கைது செய்யக்கோரி சாலையில் வாகனங்களை மறித்து தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டதோடு இந்த போராட்டத்தின்போது, ‘சீமான் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்’ என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

அவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர், அதுமட்டுமின்றி சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்