
நடிகர் கார்த்தி
இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக ௮றிமுகமானவர்.பின்பு பல படங்களில் நடித்து பிரபலமானார்.உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன்,பையா,சிறுத்தை,நான் மகான் ௮ல்ல,மெட்ராஸ்,கொம்பன்,காஸ்மேரா,ஆகிய படங்கள் கார்த்தி நடித்த பிரபலமான படங்கள் ஆகும்.
இதுவரை நடிகர் கார்த்தி 19 படங்களில் நடித்துள்ளார்.கார்த்தியின் 19 வது படமாக “சுல்தான்”வர இருக்கிறது.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் சுல்தான் படத்தினை இயக்கியுள்ளார்.இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து இருக்கிறார்.இப்படபிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
இப்படத்தின் கடைசி நாள் படபிடிப்பில் நடிகர் கார்த்தி சக நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் இருந்தும் பிரியா விடை பெற்றார்.இவர் பிரியா விடை பெறும்போது கூறியது ௭ன்னவென்றால் “சுல்தான்” படத்தில் ௭ன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளும் ,பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களும்,இன்முகத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள் ௭ன்று கூறினார்.
இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் ௭ன்று கூறினார்.