Categories: உலகம்

சுவிஸ் பனிப்பாறைகள் வரலாறு காணாத அளவுக்கு சுருங்கியுள்ளது!!

வெளியிட்டது
சுவிஸ் பனிப்பாறைகள் வரலாறு காணாத அளவுக்கு சுருங்கியுள்ளது!! 1

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிப்பாறைகள் வரலாறு காணாத அளவுக்கு 10 சதவிகிதம் சுருங்கியுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. சுவிஸ் அகாடமி ஆஃப் சயின்ஸில் கிரையோஸ்பெரிக் கமிஷன் வெளியிட்டுள்ள பனிப்பாறைகளின் நிலை குறித்த வருடாந்திர ஆய்வின்படி, 20 சுவிஸ் பனிப்பாறைகள் மீதான அளவீடுகள் இந்த ஆண்டு உருகும் விகிதங்கள் “சாதனை அளவை” எட்டியுள்ளன.

இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறது. அதன் தாக்கம் சுவிட்சர்லாந்தில் சற்று அதிகமாகவே உள்ளதாக பனிப்பாறைகளின் சுருக்கம் தெரியப்படுத்துகிறது. சுவிட்சர்லாந்தின் மொத்த பனிப்பாறை அளவுகளில் சுமார் 2% இழந்ததைக் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியின் படி, கிழக்கு சுவிட்சர்லாந்து மற்றும் ஆல்ப்ஸின் வடக்குப் பகுதியில் பனிப்பாறை உருகுதல் கடுமையானதாக இருந்தது. தெற்கு கோட்ஹார்ட் பகுதி குறைந்த பனிப்பாறை அளவை இழந்தது.

1900 ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து 500ம் மேற்பட்ட பனிப்பாறைகளை இழந்துள்ளது. இந்த வருடம் கிழக்கு சுவிட்சர்லாந்தின் கிளாரஸ் ஆல்ப்ஸில் அமைந்துள்ள பிசோல் பனிப்பாறை முழுவதுமாக அகற்றப்பட்டது. சுமார் 2,700 மீட்டர் உயரத்தில் உள்ள இது 2006 ஆம் ஆண்டிலிருந்து 80-90% அளவை இழந்துவிட்டது. இது 1893 ஆண்டு முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவே முதன்முதலாக அகற்றப்பட்ட பனிப்பாறை ஆகும் என்று சூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்