ஜப்பானை தாக்கிய “ஹகிபிஸ் புயல்”!!

ஜப்பானை தாக்கிய "ஹகிபிஸ் புயல்"!! 1

ஜப்பான் நாட்டை இன்று “ஹகிபிஸ் புயல்” தாக்கியுள்ளதால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதில் குறைந்த பட்சம் 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். இப்புயல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியதால் மிக உயர்ந்த அளவிலான பேரழிவு எச்சரிக்கையை வெளியிட்டனர்.

ஜப்பானில் இப்புயல் கரையை கடப்பதற்கு முன் அங்கு நடக்கவிருந்த இரண்டு ரக்பி உலகக் கோப்பைகளை ரத்து செய்தனர். மேலும் ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸை தாமதப்படுத்தினர் மற்றும் டோக்கியோவில் உள்ள அனைத்து விமானங்களையும் தரையிறக்கச் செய்தனர். சுமார் 7.3 மில்லியன் மக்கள் கட்டாயமற்ற வெளியேற்ற உத்தரவுகளின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

“ஹகிபிஸ் புயல் ” ஜப்பானின் பிரதான ஹோன்ஷு தீவை இரவு 7 மணிக்குள் (1000 ஜி.எம்.டி) பலத்த காற்றுடன் கடந்தது. பின்பு டோக்கியோவின் தென்மேற்கே உள்ள தீபகற்பத்தில் உள்ள இசுவுக்குள் நுழைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜே.எம்.ஏ) கூறியுள்ளது. இது மணிக்கு 216 கிலோமீட்டர் காற்று வீசியதாக கூறப்படுகிறது.

ஜப்பானை தாக்கிய "ஹகிபிஸ் புயல்"!! 3

“அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் முன்னோடியில்லாத வகையில் பலத்த மழை பெய்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்கனவே நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம். உங்கள் உயிரைக் காப்பாற்ற உதவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ”

விளம்பரம்

என்று ஜே.எம்.ஏ முன்னறிவிப்பாளர் யசுஷி கஜிவாரா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜப்பான் நாடு மிகக் கடுமையான மழையையும், சூறைக்காற்றையும் சந்தித்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment