Categories: சினிமா

ஜிம் கட்டணத்தை செலுத்த கூட பணம் இல்லை! தேவர்கொண்ட ஃபிளாஷ்பாக்!!

வெளியிட்டது
ஜிம் கட்டணத்தை செலுத்த கூட பணம் இல்லை! தேவர்கொண்ட ஃபிளாஷ்பாக்!! 1

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஸ்டார் ஆனா தெலுங்கு ஹீரோ விஜய் தற்போது அவர் கடந்த வந்த பாதையை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வெற்றி பெற, முன்னணி இடத்துக்கு உயர்ந்தார். ஆனால் இவர் சினிமாவுக்கு வரும் முன் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அப்போது பணம் குறைவாக இருக்கும் என்பதால் அதிகம் சிரமப்பட்டேன். நான் ஒரு சிறு வீட்டில் தான் வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு வாடகை பணம் செலுத்த முடியாமல் தவித்து இருக்கிறேன். பலமுறை வாடகை பணத்தை இதோ இப்போது தருகிறேன், அதோ அப்போது தருகிறேன் என்று எல்லாம் கூறி காலத்தை கடத்தி உள்ளேன்.

ஹீரோவாகும் லட்சியத்தை முன் நிறுத்தி ஜிம்முக்கு சென்று உடலை ஃபிட்டாக வைத்திருக்க பயிற்சிகள் எடுப்பேன். அப்போது ஜிம்முக்கான கட்டணம் கூட செலுத்துவதற்கு பணம் இருக்காது. ஜிம் மாஸ்டரை சமாதானப்படுத்தி பணம் கட்டாமல் காலம் கழித்திருக்கிறேன். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இப்போது இருக்கும் நிலமை வரும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இதற்கு கடவுளுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்றார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்