Categories: கல்வி

ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் தேர்தல் முடிவு!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் அனைத்து பதவிகளையும் கைப்பற்றியது இடதுசாரி அணி.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் (ஜே.என்.யு.எஸ்.யூ) தேர்தலில் நான்கு மத்திய குழு பதவிகளை இடது மாணவர் குழுக்களின் ஐக்கிய முன்னணி வென்றுள்ளது. இக்கூட்டணியில் அகில இந்திய மாணவர் அமைப்பு, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் அமைப்பு, ஜனநாயக மாணவர் சங்கம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. முன்னதாக தேர்தல் அறிவிப்பை நீதிமன்ற நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் லிங்டோ குழுவின் பரிந்துரையை தொடர்ந்து, நீதிபதி சஞ்சீவ் சச்ச்தேவா, தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கோரி பல்கலைக்கழக தேர்தல் நடத்தை குழுவிற்கு உத்தரவிட்டார்.

ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் தேர்தல் முடிவு! 1
தலைவர் ஆயிஷே கோஷ் மற்றும் துணைத்தலைவர் சாகேத் மூன்

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) மனிஷ் ஜாங்கித் 1185 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். இவர் ஆயிஷே கோஷிடம் தோல்வியை தழுவினார். மேலும், ஜே.என்.யூ மாணவர் சங்க துணைத் தலைவராக சாகேத் மூன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர யாதவ், செயலாளராக முகமது டேனிஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற பல்கலைக்கழக தேர்தலில் இந்த முறை தான் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன. சுமார் 67.9 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்