Categories: அரசியல்

ஜே.என்.யூ தாக்குதல்: கைது செய்யப்படாமல் இருக்கும் குண்டர்கள்!

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்யப்படாமல் இருப்பதற்கு டெல்லி காவல்துறை இதுவரை பதில் அளிக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜே.என்.யூ தாக்குதல்: கைது செய்யப்படாமல் இருக்கும் குண்டர்கள்! 1
குண்டர்களின் தாக்குதலில் காயமடைந்த கோஷ் மற்றும் சுச்சரிதா சென்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம், கல்வி கட்டண உயர்வு போன்ற காரணங்களால் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி அன்று முகமூடி அணிந்த குண்டர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர்.

இதில் மாணவர் சங்க தலைவர் கோஷ் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த கொடூர செயலுக்கு இந்து ரக்‌ஷா தளம் பொறுப்பேற்றது. இது தொடர்பாக இடதுசாரி அமைப்புகளிடமிருந்து 7 புகார்களும், ஏ.பி.வி.பி அமைப்பிடமிருந்து 3 புகார்களும், ஜே.என்.யூ பேராசிரியர் சுச்சரிதா சென்னும் புகார் அளித்துள்ளார்.

முகத்தை மறைத்துக்கொண்டு தாக்கிய குண்டர்கள்

இருப்பினும் தாக்குதலில் ஈடுபட்ட எந்த ஒரு குண்டரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது குறித்து டெல்லி காவல்துறை கூறும் போது, புகார்களை விசாரணைக்காக குற்ற பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட வீடியோக்களை தடவியல் துறைக்கு அனுப்பட்டு அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்