Categories: கல்வி

ஜே.என்.யூ வில் புதிய கட்டுப்பாடு!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை அட்டைகள் வைத்திருப்பதை உறுதி செய்யுமாறு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் பாதுகாப்பு காரணங்களுக்காக “அடையாள அட்டையை கேட்கும்போதெல்லாம் பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்” எனவும் தெரிவிப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை பாதுகாப்பு தலைமை அலுவலர் நவீன் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது

அவ்வறிக்கையில், “மாணவர்கள் அனைவரும் தங்களுடைய அடையாள அட்டையுடன் பல்கலைகழகத்திற்கு வர வேண்டுமெனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களை சோதனையிட ஒத்துழைப்பு கொடுக்குமாறு” தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழக வளாகத்தை சிறைக்கூடம் போல மற்ற முயற்சி செய்கிறார்கள் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பு கண்டித்துள்ளது.

மேலும், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முயல்வதை நாங்கள் ஒரு போதும் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தெரிவித்திருக்கிறது.

அதேபோல், இந்த சுற்றறிக்கையை நிராகரிக்கும் படி மாணவர் சங்கம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்